தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 5, 2021, 1:06 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால்,  1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால்,  1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். 8ம் தேதிக்கு பிறகு முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். 

மேலும், 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 3.30 மணிவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வகுப்பறை மேஜையில் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் மற்றொரு மாணவரும் அமர்கின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.  மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மாணவர்களைக் கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. எனினும் பெற்றோர்கள் அக்கறையுடன் மாணவர்களை அனுப்ப வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

click me!