சிவில் டிபென்ஸ் அதிகாரி ராஃபியா அந்தரங்க உறுப்பு சிதைக்கப்பட்டு கொடூர கொலை.. எரிமலையாய் வெடிக்கும் ஜோதிமணி.!

Published : Sep 05, 2021, 12:17 PM IST
சிவில் டிபென்ஸ் அதிகாரி ராஃபியா அந்தரங்க உறுப்பு சிதைக்கப்பட்டு கொடூர கொலை.. எரிமலையாய் வெடிக்கும் ஜோதிமணி.!

சுருக்கம்

ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.

சிவில் டிபென்ஸ் அதிகாரி ராஃபியா கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பகல்வி முதலே பெண்கள் சமத்துவம்,மரியாதை,பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.

பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மடுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும். சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்கவேண்டும். அப்பொழுதுதான்  குற்றங்கள் குறையும் என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!