எதிர்கட்சியா இருந்தபோது பேசியதை இப்ப பேச வேண்டியதுதானே.. திமுகவை வம்பிழுத்த அண்ணாமலை.

By Ezhilarasan Babu  |  First Published Jul 28, 2021, 12:03 PM IST

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல் திமுக எதோ செய்கிறது. திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது பேசிய விசயங்களை இப்போது பேச வேண்டியது தானே. அதில் என்ன சட்டச்சிக்கல் என்பது திமுகவிற்கு தெரியும். 2018ம் ஆண்டு 3 பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ரூ. 2.50 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.


பொய்யான வாக்குறுதி சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவின் உண்மை முகத்தை காட்டுகிறது அதிமுக போராட்டம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : அதிமுக மாநிலம் முழுவதும் நடத்தும் போராட்டம் நியாயமானது. நியாயமான போராட்டம் என்பதால் மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. பலமுறை சுட்டிக்காட்டி உள்ளது. 75 நாட்களாகியும் எந்தொரு முக்கியமான வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் விலை, நீட் உள்ளிட்டவற்றை நீக்குவதாக சொல்லிவிட்டு இப்போது தப்பிக்க காரணத்தை கண்டுபிடித்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுக போராட்டம் வெற்றி பெறட்டும். மக்கள் உண்மையை உணர வேண்டும் என்பதால் அதிமுக போராட்டம் நடத்துவதால் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பா.ஜ.க. மக்களுடன் நிற்கும். திமுக மீனவர்களுக்கு எதிரான செயல்படிவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. டெல்டா பகுதிகளில் விவசாய மக்களுக்கு கஷ்டம் தரும் பிரச்சனை, சாமானிய மக்களுக்கு 75 நாள் திமுக ஆட்சியை பார்த்து வெறுப்பு வந்துவிட்டது. எப்போது மக்களின் எண்ணங்களை பிரதிப்பலிக்க வேண்டும் அப்போது பா.ஜ.க. எதிரொலிக்கும். பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து போராட்டம் என்பதை விட பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொல்லி ஆட்சிக்கு வந்து குறைக்காமல் சாக்குபோக்கு சொல்லும் திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துகிறது. 

Latest Videos

undefined

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் டெல்லியில் பிரதமர், அமீஷ்தா ஆகியோரை சந்தித்து சில கோரிக்கை வைத்து உள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக மத்திய மந்திரியும் கூறியுள்ளார். புதிய எண்ணை கிடங்கில் இருந்து பெட்ரோல் கொண்டு வருவது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக சொன்ன ரூ.5 மட்டும் குறைக்க கூடாது. ஆட்சிக்கு வந்த பின் கூடுதலாக ரூ.1.25 சம்பாதித்து உள்ளது. நியாயப்படி ரூ. 6.50 வரை குறைக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வை பா.ஜ.க.வும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை காணப்படும். பெட்ரோல் விலையை குறைக்க ஒரு சிஸ்டம் வைத்து குறைக்க வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.  சொன்ன விசயத்தை ஏன் செய்யவில்லை என்பதற்காக தான் போராட்டம். 

ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என்று பா.ஜ.க. சொல்லவே இல்லை. பெட்ரோலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார். மாநில நிதியமைச்சர் சொல்லட்டும் பதிலளிக்கிறேன். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரலாம் என்று சொல்லட்டும். அப்புறம் பார்க்கலாம். கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல் திமுக எதோ செய்கிறது. திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது பேசிய விசயங்களை இப்போது பேச வேண்டியது தானே. அதில் என்ன சட்டச்சிக்கல் என்பது திமுகவிற்கு தெரியும். 2018ம் ஆண்டு 3 பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ரூ. 2.50 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

 

click me!