உறுதிகாட்டிய ஓ.பி.எஸ்... நிம்மதி பெருமூச்சில் எடப்பாடி... ஒன்று சேர்த்த திமுக-சசிகலா..!

By Thiraviaraj RMFirst Published Jul 28, 2021, 11:50 AM IST
Highlights

தற்போதைய நிலை தொடரும். அதிகாரமுள்ள அதிமுக பொதுக்குழுதான் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. 

சசிகலா அதிமுகவை கைப்பற்றியே தீர்வேன் என முழங்கி வருகிறார். இதற்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.அதேவேளை அவருக்கு எதிராக கருத்துக் கூறாமல் அமைதி காத்து வந்தார். இதனால் அவர் சசிகலாவை அதிமுகவில் இணைக்க சம்மதிக்கலாம் என பலரும் கூறி வந்தனர். ஆனால், தற்போது அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. அதிமுகவுக்குள் தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் நிர்வாகம் செய்துள்ளோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘’தனி நபரோ, ஒரு குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை அதிமுகவில் உள்ளது. ஜனநாயக முறைப்படி கட்சி நடக்கிறது. என்ன முயற்சி எடுத்தாலும், யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. தற்போதைய நிலை தொடரும். அதிகாரமுள்ள அதிமுக பொதுக்குழுதான் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழிநடத்தி வருகிறோம். காவிரியின் முழு உரிமையையும் பெற்ற அரசு அதிமுக அரசு. யாரும் உரிமை கொண்டாட முடியாது. 

 ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும், கொடுக்காததும் பாஜகவின் நிலை. அது அவர்கள் எடுக்கின்ற முடிவு” என அவர் தெரிவித்தார். அத்தோடு ஆட்சிக்கு வந்துள்ள திமுக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தும் அஸ்திரத்தை எடுத்துள்ளது. அதனை எதிர்க்கொள்ள வேண்டிய நிலையில் ஓ.பி.எஸ், எடப்பாடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் உள்ளனர். இந்த நெருக்கடிகளை சமாளிக்க டெல்லி சென்று மோடி, அமித்ஷாவை சென்று முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடியும், ஓ.பிஎஸும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நெருக்கடிகளை சமாளிக்க முடியும். இருவரும் இருதுருவங்களாக விலகி நின்றால் நிச்சயம் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தே ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக பேசி, தானும் எடப்பாடியும் ஒற்றுமையாக உள்ளதை தற்போது உணர்த்தி உள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

click me!