நாங்கள் ரோடு போட்டோம் அதில் இவர்கள் வண்டி ஓட்டுகிறார்கள்.. திமுகவை நக்கலடித்த எடப்பாடி பழனிச்சாமி.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 11:33 AM IST
Highlights

திமுக ஆட்சியை விட்டுபோகும் போது 1 லட்சம் கோடி கடனில்தான் விட்டு சென்றது என்றும், அதுபோல நாங்களில் மக்கள திட்டங்களுக்காகத்தான் கடன் வாங்கினோம் அது அனைத்தும் முதலீடாக உள்ளது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். 
 

திமுக ஆட்சியை விட்டுபோகும் போது 1 லட்சம் கோடி கடனில்தான் விட்டு சென்றது என்றும், அதுபோல நாங்களில் மக்கள திட்டங்களுக்காகத்தான் கடன் வாங்கினோம் அது அனைத்தும் முதலீடாக உள்ளது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். 

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூறு அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தின் முன்பு தொண்டர்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.  அப்போது திமுகவை கண்டித்து முழக்கம் எழுப்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், எனது வீட்டுக்கு முன் இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சுமார் 505 அறிவிப்புகள், அதாவது தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் சில முக்கியமான அறிவிப்புகளை கூட அவர்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

தேர்தல் நேரத்தில் தவறான பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களிடம் வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது திமுக. எனவே தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம், அதற்காகத்தான் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்றார். அதிமுக, அரசை கடனில் விட்டுச் சென்றுள்ளதால்தான் வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினர் கடைசியாக ஆட்சியை விட்டுபோகும்போது கூட 1 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுதான் போனார்கள், அதுபோலத்தான் அதிமுக ஆட்சியிலும் கடன் வாங்கப்பட்டது என்றால்,  அரசாங்கத்தின் திட்டங்களுக்காக வாங்கப்பட்டது, அனைத்தும் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என கூறி திமுகவினர் மாணவர்கள் திசை திருப்புகிறார்கள், குழப்புகிறார்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு ஏன் இப்போது ரத்து செய்யவில்லை, ஏன் மாணவர்கள் குழப்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். செய்தியாளரிட் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா வந்தபோத அதிமுகதான் ஆட்சியில் இருந்தது,  நாங்கள் செய்து வைத்த மருத்துவ கட்டமைப்பில்தான் இவர்கள் பணியாற்றினார்கள், இவர்களாக எதையும் செய்யவில்லை, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல் அரசு என பாரத பிரதமரே அதிமுக அரசை பாராட்டினார். 

மற்றோரு கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளது, அதை மறந்துவிட்டு ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார் என்றார், மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும். சமூக நீதி நிலைநாட்ட முடியும்,  இதை ஸ்டாலின் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். வன்னிய மக்களுக்கு10.5%  இட ஒதுக்கீடு என்பது அதிமுக அரசு கொண்டு வந்தது, அதை இவர்கள் செய்திருக்கிறார்கள், பெருவாரியான மக்கள் எங்களிடம் கோரிக்கை வைத்தார்கள் அதனடிப்படையில் அதிமுக அந்த இட ஒதுக்கீட்டை வழங்கியது என்றார். 
 

click me!