மதுரை ஆதரவற்று இறந்துகிடந்த முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ 56 லட்சம்..!

Published : Jul 28, 2021, 11:07 AM ISTUpdated : Jul 28, 2021, 03:19 PM IST
மதுரை ஆதரவற்று இறந்துகிடந்த முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ 56 லட்சம்..!

சுருக்கம்

மதுரையில் ஆதரவற்று சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.56 லட்சம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் ஆதரவற்று சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.56 லட்சம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் முதியவரான ராதா. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவாக யாருமற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். கவனிப்பாரற்று வீதிகளில் தங்கி வாழ்நாளை கழித்து வந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்கன் கல்லூரி அருகே இறந்து கிடந்தார் முதியவர் ராதா. அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவரது ஒரு வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம், மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆண்டு 36 லட்சத்தை ஒரே தவணையாக எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

யாரும் யாரையும் அலட்சியமாக பார்க்கக்கூடாது. ஆதரவற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் உடைமைகள் இருக்கும் என்பதை முதியவர் ராதாவின் மரணம் நிரூபித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!