ஓபிஎஸ் செய்தது செம காமெடியாக உள்ளது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!

By Narendran SFirst Published Jul 15, 2022, 8:32 PM IST
Highlights

தங்களை ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கியது காமெடியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தங்களை ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கியது காமெடியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். கட்சியை விட்டு ஒருவரை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தான் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் எங்களை கட்சியை விட்டு நீக்கியதை ஒரு காமெடியாக தான் பார்க்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பாக பேசிய ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் தற்போது எங்கள் கட்சியில் இல்லை. நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டுடன் வந்தார் ஓபிஎஸ்... பன்னீர் மீது பகீர் புகார்.\

முன்னதாக சென்னை வானகரத்தில் கடந்த 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், 5 மாவட்ட செயலாளர்கள் உள்பட 18 பேர் நேற்று கூண்டோடு கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: அதிமுக அலுவலக சீலை அகற்றக்கோரிய வழக்கு... தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!!

அதற்கு, பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தங்களை ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கியது காமெடியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

click me!