விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்..? வியந்துபோன பிரேமலதா..!

Published : Dec 25, 2021, 12:12 PM IST
விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்..? வியந்துபோன பிரேமலதா..!

சுருக்கம்

விஜயகாந்த் தற்போது  கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வாக இருக்கிறார்.  

விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து நான் வியந்தேன் என அவரது மனைவி பிரேமலதா தெரித்துள்ளார்.

விஜயகாந்த் கடந்த பல ஆண்டுகளாக உடல் நலம் குன்றி வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்தும் பலனின்றி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கடைசியாக தமிழன் என்று சொல்லடா என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பூஜை போட்ட பிறகு அப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் சமீபகாலமாக அவர் படத்தில் மீண்டும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா, ‘’பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவு வரவேற்கத்தக்கது , இதன் மூலம் பெண்கள் கல்லூரி படிப்பை முடித்து, உடல், மன ரீதியாக பாதுகாப்புடன், எதிர்காலத்தை திட்டமிட உதவும் என்றாலும் கிராமங்களில் 18 வயதில் திருமணம் செய்யவே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். எனவே இது தொடர்பாக இந்தியா முழுவதும் மக்கள் கருத்தையும் கேட்க வேண்டும். மக்கள் வரவேற்றால் அரசாணை பிறப்பிக்கலாம்.

அரசு மக்களுக்கு  பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும். பொதுமக்கள் தவறாமல் முகக் கவசத்தை அணிய வேண்டும். கொரோனா , ஓமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். மேடையில் சீமான் செய்த செயல் தவறானது. சீமான் செய்ததற்கு பதிலாக திமுகவினர்  செய்தது அனைத்தும் அரசியல்தான். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக அவர்கள் இப்படி செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிட்டு உறுதி. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கட்சியில் செயல்  தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கருத்தை பெற்று செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில்  விஜயகாந்த் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து நான் வியந்தேன், தவறான செய்தி அது. விஜயகாந்த் தற்போது  கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வாக இருக்கிறார். அவர் நடிப்பதாக  வந்த தகவல் தவறானது. ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்" என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!