'வலிமை' படத்துக்கு வெயிட்டிங்... கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் !!

Published : Dec 25, 2021, 11:56 AM IST
'வலிமை' படத்துக்கு வெயிட்டிங்... கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் !!

சுருக்கம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'வலிமை' படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.  நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "வலிமை" படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை உற்சாகமடைய செய்து வருகிறது.   கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்திலிருந்து வெளியான விசில் தீம்  மியூசிக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  மேலும் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.  

படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த திரைப்படம் 2022 பொங்கல் பண்டிகையன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவருமான வானதி சீனிவாசன் வலிமை படத்தினை பார்க்க ஆர்வம் காட்டுவதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் கடந்த மார்ச் மாதம் இளைஞர் ஒருவர், 'வலிமை அப்டேட் எப்ப?' என ட்விட்டரில் வானதி சீனிவாசனை டெக் செய்து கேட்டிருந்தார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் வானதி சீனிவாசன் அதற்குப் பதிலும் அளித்திருந்தார். அதாவது "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் தம்பி" என ட்வீட் செய்திருந்தார்.

வானதி சீனிவாசனின் இந்த ட்வீட் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அவரிடம் வலிமை திரைப்படத்தை பார்ப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக ’வலிமை’ படம் வெளியானதும் பார்க்கப் போவேன். எனக்கு நேரம் கிடைத்தால் நல்ல படங்களை பார்ப்பது என் வழக்கம். விமான பயணங்களில் கிடைக்கும் நேரத்தில் தான் படம் பார்க்க முடியும். அண்மையில் ‘சர்தார் உத்தம்’ என்ற படத்தை பார்த்தேன்’ என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி