தமிழுக்காக பேசும் பிரதமர் மோடிக்கு இந்ந தமிழகம் என்ன கைமாறு செய்யப்போகிறது.. அண்ணாமலை உருக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 1:51 PM IST
Highlights

தமிழகத்தில் அனைவரிடமும் இந்த புத்தகம் இருக்க வேண்டும் என கூறிய அவர்,மோடி 13ஆண்டு முதல்மைச்சராக இருக்கும் போதே தமிழ் நாடுடன் தொடர்பு வைத்துகொண்டு தான் இருந்தார். சுனாமியின் போது உதவி செய்துள்ளார் என தெரிவித்தார். 

சுனாமியின் போதே தமிழகத்திற்கு உதவி செய்தவர் பிரதமர் மோடி என்றும், உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறிய பிரதமர் மோடிக்கு தமிழகம் என்ன கைமாறு செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எதிர் காலத்தில் தமிழகம் பிரதமர் மோடி பின்னால் நிற்கும் என்றும் கூறியுள்ளார். ப்ளூ ஓசன் புக்ஸ் மற்றும் அகண்ட தமிழுலகம் இணைந்து வணக்கம் தமிழகம், பிரதமரின் தமிழ் முழக்கம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், ஒன்றிய மீன்வளம் மற்றும் பால்வளம், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தகத்தின் முதல் பிரதியை காணொளி வாயிலாக ஒன்று அமைச்சர் பூபிந்தர் சிங் யாதவ் வெளியிட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் சீனிவாசன் மற்றும் சுதாகர் ரெட்டி பெற்றுக்கொண்டனர். அந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தில் அனைவரிடமும் இந்த புத்தகம் இருக்க வேண்டும் என கூறிய அவர்,மோடி 13ஆண்டு முதல்மைச்சராக இருக்கும் போதே தமிழ் நாடுடன் தொடர்பு வைத்துகொண்டு தான் இருந்தார். சுனாமியின் போது உதவி செய்துள்ளார் என தெரிவித்தார். 

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டவர்களை மன் கி பாத் நிகழ்ச்சி முலம் அடையாளம் காட்டியுள்ளார் மற்றும் 
பாரதியார் கவிதைகள் மற்றும் திருக்குறளை ஐநா சபை உள்ளிட்ட பல்வேறு இடத்தில் பேசியுள்ளார். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று கூறும் பிரதமருக்கு தமிழகம் என்ன கைமாறு செய்ய போகிறது என்று தெரியவில்லை என கூறிய அவர், இந்த புத்தகத்தை அனைத்து தமிழர்களும் படிக்க வேண்டும். நிச்சயம் வரும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழகம் பிரதமர் மோடி பின்னால் நிற்கும் என தெரிவித்தார். 
 

click me!