தர்ப்பணம் செய்ய ரூ.500... மு.க.ஸ்டாலின் படத்துடன் கோயிலில் அடாவடி வசூல்..!

Published : Oct 07, 2021, 01:47 PM IST
தர்ப்பணம் செய்ய ரூ.500... மு.க.ஸ்டாலின் படத்துடன் கோயிலில் அடாவடி வசூல்..!

சுருக்கம்

வடபழனியில் உள்ள ஆண்டவர் கோவில், குறிப்பாக மஹாளய அமாவாசையன்று, இறந்த ஆத்மாக்களுக்கு சடங்குகள் செய்யும் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும்.  

வடபழனியில் உள்ள ஆண்டவர் கோவில், குறிப்பாக மஹாளய அமாவாசையன்று, இறந்த ஆத்மாக்களுக்கு சடங்குகள் செய்யும் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

கடற்கரையில் தர்ப்பணம் தர தி.மு.க அரசு தடைவிதித்துள்ள நிலையில் சென்னையில் முக்கிய பகுதியான வடபழனி முருகன் கோவில் அருகே ஒரு மண்டபம் உள்ளது. இங்கு பித்ருக்கள் தர்ப்பணம் போன்ற காரியங்கள் செய்ய அந்தணர்களும், தர்ப்பணம் தருபவர்களும் வருவர்.

வெள்ளை சட்டையில் ஸ்டாலின் படம் தெரிய குண்டர்கள் வடபழனியில் உள்ள தர்ப்பணம் அளிக்கும் மண்டபத்தை கைப்பற்றி அங்கு காரியம் செய்ய வருவோரிடம் பணத்தை அபகரிக்கும் வழிப்பறி செயல் அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.  இந்த மண்டபத்தை தற்பொழுது ஆளும்கட்சியான தி.மு.க-வை சேர்ந்த சில நபர்கள் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றியது மட்டுமின்றி அங்கு சில குண்டர்களை நிறுத்தியுள்ளனர், அவர்கள் வெள்ளை சட்டையுடன் பையில் ஸ்டாலின் படம் தெரியும் படி நின்று கொண்டு அங்கு தர்ப்பண காரியம் செய்ய வருபவர்களிடம் அநியாய கட்டணம் வசூல் மிரட்டி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதாவது 30 ரூபாய் கட்டணம் என்று இருந்த தர்ப்பண நிகழ்வை, 300 ரூபாய், 500 ரூபாய் என கட்டணத்தை ஏற்றி அங்கு வருவோரிடம் வழிப்பறி செய்யாத குறையாக பிடுங்குகின்றனர் என குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!