பக்காவா ஸ்கெட்ச் போட்ட மோடி... 1 ட்ரில்லியன் டாலரை நோக்கி இந்திய டிஜிட்டல் பொருளாதாரம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 1:15 PM IST
Highlights

இன்வெஸ்ட் கார்ப்வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் சீனாவின் பொருளாதாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது மேலும், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையதாக டிஜிட்டல் பொருளாதாரம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் சீனாவைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாகவும், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையதாக அது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்வெஸ்ட் கார்ப் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தொழில்துறையால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் சந்தை வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இன்வெஸ்ட் கார்ப் வெள்ளை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின்படி இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. 

இன்றைய வாழ்க்கையில் டிஜிட்டல் சேவை முக்கிய அங்கமாக உள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சராசரியாக 4 ஜிபி இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இதில் பொழுதுபோக்கு முதல் ஷாப்பிங் வரை அனைத்து விதமான சேவைகளும் அடங்கியுள்ள. டிஜிட்டல் இந்தியா திட்டம்  தொடங்கப்பட்டபோது 2025ஆம் ஆண்டில் இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு  1 ட்ரில்லியன் டாலர் அளவில் உயர்ந்து இருக்கும் என்றும்,  நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 18 -23 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் யூகிக்கபட்டது.  2016-17 ஆம் நிதியாண்டில் இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 413 பில்லியன் டாலர், 2025 ஆம் ஆண்டில் 1.15 ட்ரில்லியன் அளவில் உயரும் கணிக்கப்பட்டது. பொதுவாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு,  இணையவழி மருத்துவ சேவை, இணைய வழிக் கல்வி, டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகள், இணைய நிதிச் சேவைகள், இணைய வணிகம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் வழியாக டிஜிட்டல் பொருளாதாரம் குறிப்பிட்ட அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் 1993-ஆம் ஆண்டில் பொருளாதார தாராளமயமாக்கலில் இருந்து 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட 9 மடங்கு வளர்ந்துள்ளது. இந்த நவீன சுதந்திர சந்தையில் இந்திய நுகர்வோரின் ஒரு தலைமுறை படிப்படியாக வேலைவாய்ப்பு அனுபவத்தையும் பெற்றுள்ளது. இது ஒரு வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை துரித படுத்தியதாக நம்பப்படுகிறது.  வரும் காலத்தில் ஒரு ட்ரில்லியன் டிஜிட்டல் பொருளாதாரத்தை செயல்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது முழுக்க முழுக்க பிரதமர் மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியாவை மையமாக வைத்தே சாத்தியப் பட்டிருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.  டிஜிட்டல் இந்தியா திட்டம் ஒரு தலைமுறையையே டிஜிட்டல் தலைமுறையாக உருவாக்கியுள்ளது.

இன்வெஸ்ட் கார்ப்வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் சீனாவின் பொருளாதாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது மேலும், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையதாக டிஜிட்டல் பொருளாதாரம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் 11 புதிய  யூனிகார்ன்கள் (அதாவது குறைந்தது 1 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட தனியார் தொழில் நுட்ப நிறுவனங்கள்)  2020இல் உருவாக்கப்பட்டன, இது முந்தைய மூன்று ஆண்டுகளுக்கு சமமானதாகும். 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா 15 புதிய யூனிகார்ன்களை உருவாக்கியுள்ளது. இது மொத்தம் ஆறு பில்லியன் டாலர்களை 28 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திரட்டியது, 2022க்குள் நாட்டில் 100 புதிய யூனிகார்ன் உங்கள் உருவாக்கப்படும் என்று இன்வெஸ்ட் கார்ப்  மதிப்பிட்டுள்ளது. 

இந்தியாவின் பொருளாதார மேம்பாடு மற்றும் அதன் தொழில்நுட்ப அளவில் விரிவடைந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இரண்டிலும் இ-காமர்ஸ் பாரம்பரிய வர்த்தகத்தை மாற்றியுள்ளது, குறிப்பாக இரண்டு நாடுகளிலும் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்க மக்கள்தொகையில்  ஒற்றுமை காணப்படுகிறது. இந்த மக்கள் குழு கிட்டத்தட்ட 20 களின் பிற்பகுதியில் மேற்கத்திய பொருளாதாரங்களில் நம்மில் பலரும் பழகிய வழக்கமான நுகர்வு கலாச்சாரத்தை தாண்டி வந்த ஒரு தலைமுறை என்று இன்வெஸ்ட் கார்பின் இணை தலைமை அதிகாரி ரிஷி கபூர் கூறியுள்ளார். அதேபோல இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மொபைல் செயலி பதிவிறக்கம் 218 மில்லியன் அல்லது உலகின் மொத்தத்தில் 14% என்று இன்வெஸ்ட் கார்ப் கணித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில்  அமைந்துள்ளது. இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப பயனர்கள் எப்போதும் இணையத்துடன் புழங்கும் சூழல் உள்ளது.  உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் - மதிப்பு 1 டாலர் 11 இலிருந்து திறக்கிறது.2020 இல் தோராயமாக $ 250B12), மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்தத்தில் 25%13 க்கும் அதிகமானவை ஜிடிபி 2025 க்குள் இருக்கும்.

டிஜிட்டல் நுகர்வு கலாச்சாரம் இந்தியாவில் பரவி விரவி உள்ளது, 35 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை நீடிப்பதால் வருமானமும், செலவினமும் உயர்ந்து காணப்படுவதால் ஆன்லைன் நுகர்வு அதிகமாகியுள்ளது. இதனால் டிஜிட்டல் பொருளாதாரம் உயர்கிறது. இந்தியாவில் தொழில் முனைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனால் தங்களது வணிகம் மற்றும் சேவையை ஊக்குவிக்க பல்வேறு வகையான வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர், இது டிஜிட்டல் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்டர்நெட் முதல் பயனர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது. 450 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் இணைய பயனர்கள் உருவாகியுள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை துரிதப்படுத்தி மூன்று வருடங்களுக்கு மேல் இந்தியாவை உலகமயமாக்கல் துரித படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் டெலி அடர்த்தி 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது இன்று டெலி அடர்த்தி நாடு முழுவதும் 90 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்திய தொழில்முனைவோர் உலகளாவிய வணிக மாதிரிகளுக்கு பல கண்டுபிடிப்புகளை வடிவமைத்துள்ளனர்
40,0006 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்கி, தொழில்நுட்பத் தாவலைப் பயன்படுத்தி தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. மொபைல் பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு பதிவிறக்கங்கள் 2020 இல் 218 பில்லியன் 10, (உலகின் மொத்தத்தில் 14%).ஆன்லைன் வணிகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது, சீனாவை போலவே இந்தியாவின் தொழில்நுட்பங்களும் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். இவ்வாறு பல்வேறு காரணிகள் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்து இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!