ஆயுதபூஜை.. இந்த 2 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தற்காலிக பேருந்துகள் நிலையங்கள் அறிவிப்பு.!

By vinoth kumarFirst Published Oct 7, 2021, 12:56 PM IST
Highlights

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல அக்டோபர் 12 மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல அக்டோபர் 12 மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக முதலவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்;-

தாம்பரத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக பேருந்துகள் செல்லும்.

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயிலுக்கு  பேருந்துகள் செல்லும் . மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் செல்லும்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்;-

பூந்தமல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதிக்கு பேருந்துகள் செல்லும்.

கோயம்பேடு பேருந்து நிலையம்;-

கோயம்பேட்டிலிருந்து மேற்குறிப்பிட்ட ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்)

எனவே பயணிகள் மேற்கூறிய சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்ட இடங்களுக்கு கோயம்பேடு நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

click me!