கோயில்களுக்கு தமிழில் பெயர்.. அடுத்த அதிரடியில் அமைச்சர் சேகர் பாபு..

By Ezhilarasan Babu  |  First Published Oct 7, 2021, 1:35 PM IST

ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படியே கோயில்கள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூடப்படுகிறது என்றும், முழுமையாக கொரோனா குறைந்த பிறகு கோவில்கள் திறக்கப்படும் என்றும், தமிழக அரசை எதிர்த்து போராட எந்த காரணமும் இல்லாததால் பாஜகவினர் கோயில்களை எல்லா நாட்களும் திறக்க வலியுறுத்தி போராட்டம் செய்கிறார்கள்,


கோயில்களுக்கு சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ்ப் பெயரும் சேர்த்து இடம் பெறும் வகையில் முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில்களில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் இன்று கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்றும் அவர் குற்றஞ் சாட்டினார். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை மூலம் தமிழில் கோவில்களில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

கோயிலுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் இருந்துவரும் நிலையில், அதற்கு தமிழ்ப் பெயரும் சேர்த்து இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த கோயிலில் மூன்று கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், 15 லட்சம் செலவில் திருத்தேர் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். தமிழகத்தில் உள்ள சில கோயில்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது மாற்றப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதுபோன்ற வேண்டுகோள் பல இடங்களில் இருந்து வருகிறது, சில கோயில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டிலும் பெயர்கள் உள்ளன, ஆனால் சில கோயில்களுக்கு சமஸ்கிருதத்தில் மட்டும் பெயர் உள்ளது, எனவே இது குறித்து தீர ஆய்வு செய்த முதலமைச்சரின் அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில்களுக்கு பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படியே கோயில்கள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூடப்படுகிறது என்றும், முழுமையாக கொரோனா குறைந்த பிறகு கோவில்கள் திறக்கப்படும் என்றும், தமிழக அரசை எதிர்த்து போராட எந்த காரணமும் இல்லாததால் பாஜகவினர் கோயில்களை எல்லா நாட்களும் திறக்க வலியுறுத்தி போராட்டம் செய்கிறார்கள், இன்று காளிகாம்பாள் கோவிலில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் மக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  பாஜகவினர் போராட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடை அளிக்க இணையதளம்  தொடங்கப்படும் என்றார்.

 

click me!