'அடிமை அரசு' கடிதம் எழுதுவதால் என்ன பயன்? மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளாஷ்பேக் காட்டிய பாஜக பிரமுகர்..!

By Thiraviaraj RMFirst Published May 8, 2021, 2:26 PM IST
Highlights

நம் தமிழகத்தின் கட்டமைப்புகளுக்கு உதவியதாக கூறிய மு.க.ஸ்டாலின் வடமாநிலத்தவர்களை நட்டாற்றில் விடுவது நியாயமா? என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார். 

நம் தமிழகத்தின் கட்டமைப்புகளுக்கு உதவியதாக கூறிய மு.க.ஸ்டாலின் வடமாநிலத்தவர்களை நட்டாற்றில் விடுவது நியாயமா? என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாள்களில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’வன்மையாக கண்டிக்கிறேன். அவசரமாக ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு,புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்க்கான இருப்பிடம்,உணவு,குறித்து எந்த அறிவிப்பையும்  செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. "நம் தமிழகத்தின் கட்டமைப்புகளுக்கு உதவிய"(@mkstalin கூறியது)  அவர்களை நட்டாற்றில் விடுவது நியாயமா? எனப்பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், '’மத்திய  அரசுக்கு, 'அடிமை அரசு' கடிதம் எழுதுவதால் என்ன பயன்? என்று கேட்ட அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்வராக பதவியேற்ற அன்றே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.’’எனத் தெரிவித்துள்ளார். 


 

click me!