Covid சுனாமியில் பெங்களூரு. உயிருக்கு போராடும் மக்கள். உதவ முன்வருமாறு நம்ம பெங்களூரு அறக்கட்டளை அழைப்பு.

By Ezhilarasan Babu  |  First Published May 8, 2021, 2:03 PM IST

மொத்தத்தில் கொரோனா ஒரு சூறாவளி போல அம்மாநிலத்தை தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியில் இருந்து பெங்களூர் மக்களை பாதுகாக்க நம்ம பெங்களூரு என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டு அது தொடர்ந்து மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது.


கொரோனா கொடூரத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில், வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையேயான போராட்டத்தில் ஆக்சிஜன் இன்றியமையாததாக மாறியுள்ளது.  அதில் பெங்களூரு நகரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

கொரோனா வைரசின் இரண்டாவது அலையை  எதிர்த்துப் போராட கார்ப்பரேட்டுகள் மற்றும் தனி நபர்கள் முன்வந்து உதவுமாறு நம்ம பெங்களூரு அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.கொரோனா இரண்டாவது அலையின் பிடியில், கர்நாடகம் சிக்கியுள்ளது. அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்களைப் பாதுகாக்க மாநில அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ஆனாலும் வைரஸ் தொற்று குறைந்தபாடில்லை,  காரணம், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல்  பகல் 12 மணி வரையும் மற்றும் மாலை நேரங்களில் கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதே ஆகும். 

Tap to resize

Latest Videos

undefined

மற்ற விஷயங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன, இருந்தாலும் வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநிலத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசித்து முழு ஊரடங்கு குறித்து அறிவிப்பார் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். அதே போல ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்ய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது கொரோனா பரவல் அம்மாநிலத்தில் கைமீறி விட்டது என்றே சொல்லலாம். 18 லட்சத்து 38 ஆயிரத்து 885 பேர் அங்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து இன்மை போன்ற காரணங்களால் 592 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு நகரில் இதுவரை  346 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் நேற்று  ஒரே நாளில் 595 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த கர்நாடகத்தையும்  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

மொத்தத்தில் கொரோனா ஒரு சூறாவளி போல அம்மாநிலத்தை தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியில் இருந்து பெங்களூர் மக்களை பாதுகாக்க நம்ம பெங்களூரு என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டு அது தொடர்ந்து மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது. இந்நிலையில் அந்த அறக்கட்டறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  பெங்களூரு ஒரு பெரிய தொற்று நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவ முடிந்தவரை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. தற்போதைய அதிக அளவில்  ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடி வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவது காலத்தின் அவசியமாகி உள்ளது. ஆனால் ஆக்சிஜன் விநியோகத்தில் பற்றாக்குறை நிலவுவதால் அதை ஆக்ஸிஜன் சொறிவூட்டிகளால் ஈடு செய்ய முடியும். ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும்போது செறிவூட்டுகள் சிறப்பாக செயல்படுகிறது.

கொரோனா நோயாளிகள் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் ஆதரவு அவசியம், என தெரிவித்துள்ள அறக்கட்டளை அமேசான் உடன் இணைந்து 10 ஆக்சிஜன் செறிவூட்டுகளை ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்திரா நகர் அரசு மருத்துவமனையான சர்.சி.வி ராமன் பொது மருத்துவமனைக்கு விநியோகித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசின் இரண்டாவது அலைகளை எதிர்த்து போராட உதவ கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்கள் முன்வந்து பங்களிக்கலாம் என NBF எனப்படும் நம்ம பெங்களூரு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. நன்கொடையாளர்கள் இதனால் 80 ஜி வருமான வரி சலுகைகளை பெற முடியும் என்றும் மேலும் இது தொடர்பாக தொடர்பு கொள்ள 9591143888 / 7749737737. மின்னஞ்சல்: vinod.jacob@namma-bengaluru.org அல்லது usha.dhanraj@namma-bengaluru.org வழங்கப்பட்டுள்ளது. 
 

click me!