மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி... அப்படி என்ன ஆலோசித்தார்கள் தெரியுமா..?

Published : May 08, 2021, 02:13 PM IST
மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி... அப்படி என்ன ஆலோசித்தார்கள் தெரியுமா..?

சுருக்கம்

தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார். 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாள்களில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!