இரண்டு அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன்..? ஒட்டு மொத்தமாக திருச்சியை தட்டித் தூக்கிய திமுக..!

By Selva KathirFirst Published Jan 5, 2020, 2:54 PM IST
Highlights

கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது திருச்சியில் உள்ள அத்தனை ஊரக பதவிகளையும் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு பெற்றுக் கொடுத்தனர் அக்கட்சியின் தொண்டர்கள். ஆனால் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைத்து பதவிகளையும் திமுகவிற்கு தாரை வார்த்துள்ளது அதிமுக. இத்தனைக்கும் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் கே.என்.நேருவின் வியூகத்தை சமாளிக்க முடியவில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் படு தோல்வியை சந்தித்துள்ள அதிமுக அந்த மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களையும் திமுகவிடம் இழந்துள்ளது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது திருச்சியில் உள்ள அத்தனை ஊரக பதவிகளையும் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு பெற்றுக் கொடுத்தனர் அக்கட்சியின் தொண்டர்கள். ஆனால் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைத்து பதவிகளையும் திமுகவிற்கு தாரை வார்த்துள்ளது அதிமுக. இத்தனைக்கும் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் கே.என்.நேருவின் வியூகத்தை சமாளிக்க முடியவில்லை.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 ஒன்றிய குழு தலைவர்கள் பதவி உள்ளன. இந்த அனைத்து பதவிகளையும் திமுக தட்டித் தூக்கியுள்ளது. ஒரு ஒன்றிய தலைவர் பதவி கூட அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. மொத்தம் 241 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் திருச்சியில் உள்ள நிலையில் அதில் வெறும் 51 தான் அதிமுகவிற்கு கிடைத்தது. திமுகவோ 150க்கும் மேற்பட்ட பதவிகளை அள்ளியுள்ளது.

இதோடு மட்டும் அல்லாமல் மொத்தம் உள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுகவிற்கு கிடைத்ததோ 19 பதவிகள். ஆனால் அதிமுக வெறும் 5ல் மட்டுமே வென்றது. இதனால் மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் பதவியையும் திருச்சி அதிமுகவினர் நழுவவிட்டுள்ளனர். இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அதிமுகவால் திருச்சியில் வெற்றிக் கொடி நாட்ட முடியாமல் போனதற்கு விவசாயிகள் தான் காரணம்எ ன்று சொல்கிறார்கள்.

திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் அதிருப்தி தான் திமுகவிற்கு வெற்றி வாகையை தேடித்தந்துள்ளது. இதனை சரியாக கணித்து திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என் நேரு வகுத்த வியூகம் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

click me!