எடப்பாடி பழனிசாமி தொகுதியின் நிலவரம் என்ன..? அடிச்சுத்தூக்கும் கமல்ஹாசன்..!

By Thiraviaraj RMFirst Published May 2, 2021, 9:10 AM IST
Highlights

அமமுக 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 44 இடங்களிலும் அதிமுக கூட்டணி 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அமமுக 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

கேரளா  மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 61, காங்கிரஸ் கூட்டணி 47, பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மே.வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் கூட்டணி 82 தொகுதிகளிலும், பாஜக 80 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

click me!