10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதிமுகவிற்கு எதிரான அலை இல்லை..! திமுகவிற்கு செம டஃப் ஃபைட் கொடுக்கும் அதிமுக

By karthikeyan VFirst Published May 2, 2021, 9:09 AM IST
Highlights

தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதிமுகவிற்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இல்லை என்பது வாக்கு எண்ணிக்கையின் மூலம் தெரியவருகிறது. திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி குறைந்தது 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், அதிமுக அதளபாதாளத்தில் இருப்பதை போலவும் முடிவுகள் வெளியிட்டன.

ஆனால் நிஜத்தில் கள நிலவரமோ அப்படியில்லை. 9 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், அதிமுக கூட்டணி 31 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக ஒரு தொகுதியிலும் பாமக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. தாராபுரம் தனி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் முறையே எடப்பாடி, தொண்டாமுத்தூர் மற்றும் குமாரபாளையம் தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனியப்பன் முன்னிலை வகிக்கிறார். வாக்கு வித்தியாசம் குறைவுதான் என்பதால் முடிவு எப்படியும் மாறக்கூடும்.’

திமுக எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பதை போன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இருந்த நிலையில், அதிமுக செம டஃப் ஃபைட் கொடுத்துவருகிறது. எனவே கடும் போட்டி நிலவுகிறது. திமுகவிற்கு வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதிமுகவிற்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இல்லை என்பது வாக்கு எண்ணிக்கையின் மூலம் தெரியவருகிறது. திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

click me!