தாராபுரத்தில் தரமான சம்பவம்... தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 9:06 AM IST
Highlights

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு எண்ணிக்கையிலேயே பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா, ஈரோடு மேற்கு, அண்ணாநகர், கூடலூர், உதகை, குன்னூர், ஆண்டிப்பட்டி, பெருந்துறை, திருச்சி உள்ளிட்ட 40 இடங்களில் திமுக கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், அதிமுக கூட்டணியினர் கடலூர், கும்பகோணம், ஆரணி, மொடக்குறிச்சி உள்ளிட்ட 30  இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 20 இடங்களில் போட்டியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் பாஜகவினரை அனுப்ப வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தபால் வாக்குகளின் படி எல்.முருகன் 4 ஆயிரத்து 218 வாக்குகளையும்,  திமுக வேட்பாளர் 3 ஆயிரத்து 421 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. a

click me!