யெஸ் வங்கி எம்.டிக்கும் ,ப.சிதம்பரத்துக்கும் என்ன தொடர்பு..!!? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2020, 10:09 AM IST
Highlights

2012ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராணா கபூர் மகள் திருமண வரவேற்பில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

T.Balamurukan
'யெஸ்' வங்கியில் நடந்திருக்கும் மிகப்பெரிய ஊழல் என்றே சொல்லும் அளவிற்கு இன்று விசுவரூபம் எடுத்திருக்கிறது வராக்கடன் கணக்கு வழக்குகள். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசியல் புள்ளிகளையும், கண்காணிக்க தவறிய ரிசர்வ் வங்கி அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் எனவும் ப.சிதம்பரம் இந்த வங்கியின் நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர் எனவும் அதற்கான புகைப்படத்தை ஆதாரமாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் பாஜகவினர்.

2012ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராணா கபூர் மகள் திருமண வரவேற்பில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

'யெஸ்' வங்கி அதிகமான கடன்களை வழங்கியதால் வாரா கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் சிக்கித்தவித்த வங்கி நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றது. ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது. மேலும், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.

 மும்பையில் இருக்கும்  'யெஸ்' வங்கி நிறுவனர் ராணா கபூரின் வீட்டில் அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்தினர். அடுத்தகட்ட நடவடிக்கையாக மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ராணா கபூர் விசாரணை செய்யப்பட்டார். இந்த நிலையில், 'யெஸ்' வங்கியின் பங்குகளை 2450 கோடிக்கு வாங்க பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. இதனால் வங்கி தொடர்ந்து இயங்கும் என்று நம்பப்படுகிறது. யெஸ் வங்கியை மீட்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல் என மத்திய முன்னாள் நிதிஅமைச்சர்,  ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின்கீழ் நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தால்தான் யெஸ் வங்கி தோல்வி அடைந்துள்ளது. இது தொடர்பாக பாரத ரிசர்வ் வங்கி முழுமையான விசாரணை நடத்தி, காரணமானவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும். ஆனால் ரூ.2,450 கோடிக்கு இந்த வங்கியின் 49 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கியை வாங்க வைக்கும் திட்டம் வினோதமானது” என்று கூறினார். 
இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் மிகப்பெரிய வங்கிகளில் 4வது இடத்தை பிடித்துள்ளது யெஸ் வங்கி. இந்த வங்கி திவாலாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


 

click me!