தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறைக்கு என்ன காரணம்? உடனடி நடவடிக்கை தேவை. கனிமொழி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2021, 4:25 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறைக்கு என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்பதனை கண்டுபிடித்து  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறைக்கு என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்பதனை கண்டுபிடித்து  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. உலகிலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதித்த நடக்க இந்தியா மாறியுள்ளது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, அதனால் மருத்துவமனைகளின் நேர்ந்த விபத்துக்கள்  என இந்திய மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் கொடூரம் ஆன்றாடம் அரங்கேறி வருகிறது. 

சர்வதேச அளவில் பரிதாபத்துக்குரிய நாடாக இந்தியா தள்ளப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையில் பல நாடுகளுக்கு உதவிய இந்தியா, தற்போது பல நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக்த்திலும் ரெம்டெசிவர் தடுப்பூசி தட்டுப்பாடு, உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் மருத்துவ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி கோரிக்கை விடுத்திருந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க தரேஸ் அகமது என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இதுதொடர்பாக, கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கிறார்களா? என்பதனை முறையாக கண்காணிக்காததால் இதுபோன்ற பிரச்சனை எழுந்தது. இதனை முறைப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு மருந்துக்கு தனியார் மருந்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட என்ன காரணம்? என்பதனை கண்டுபிடித்து அதனை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
 

click me!