பாமக தனித்துப்போட்டி... அதிமுக கூட்டணியை பிரிய காரணம் என்ன..? போட்டுடைத்த பாமக நிர்வாகி..!

By Thiraviaraj RMFirst Published Sep 15, 2021, 1:47 PM IST
Highlights

அதிமுக உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்ந்து இருக்கிறது என பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார். 
 

அதிமுக உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்ந்து இருக்கிறது என பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.

 

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிட உள்ளதாக ராமதாஸ் தெரிவித்து இருந்தார். அதிமுகவினரை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியால் எப்படி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியும்? ஆகையால் பாமக தனித்து போட்டியிடுகிறது என கேள்வி எழுப்பி இருந்தார். அவரது கேள்விக்கு அதிமுகவும் பதிலடி கொடுத்து இருந்தது. இரு தரப்பினரும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக செய்தி தொடர்பாளர் பாலு கூறுகையில், ‘’பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் விருப்பம். உடனடியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியது இருப்பதால், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் இல்லை. அதனால் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. 

அதிமுக உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்ந்து இருக்கிறது. பாமக தனித்து போட்டியிடுவது அரசியல் ரீதியாக பெரிய விஷயம் இல்லை’’என அவர் தெரிவித்தார். 

click me!