தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இல்லை.. அலறிய எடப்பாடி பழனிச்சாமி.. ஆணையத்துக்கு எழுதிய பரபரப்பு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2021, 1:46 PM IST
Highlights

வாக்கு பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை வரை வாக்குச்சீட்டு பெட்டிகளை  சிஆர்பிஎஃப் வீரர்களே பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேர்தல் பரப்புரைகளை முழுமையாக புதிய கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர்,

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்றும், பாதுகாப்புக்கு தமிழக போலீசை நிறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாநில போலீஸ் செயல்படக்கூடும் என்பதால், சிஆர்பிஎஃப் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக 9 மாவட்டங் களுக்கான உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான கூட்டணி அறிவிப்புகள் வெளியாகி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாகியுள்ளது.  

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள பாமக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என பிரகடனம் செய்துள்ளது. அதேநேரத்தில் மற்றொரு கட்சியான தேமுதிகவும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, எனவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் மாநில போலீசாரை ஈடுபடுத்த கூடாது என்றும், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாநில போலீஸ் செயல்படக்கூடும் என்பதால் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

வாக்கு பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை வரை வாக்குச்சீட்டு பெட்டிகளை  சிஆர்பிஎஃப் வீரர்களே பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேர்தல் பரப்புரைகளை முழுமையாக புதிய கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், வாக்குப்பதிவின் போதும் வாக்கு எண்ணிக்கையின் போதும் அதிக அளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார். மேலும் வெளிமாநில பார்வையாளர்களை தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டுமென்றும், சமூக விரோதிகளின் செயல்பாடுகள் முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடந்திட வேண்டும் என்றும் அவர் தனது  கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். 
 

click me!