மீண்டும் அண்ணா... விஜய் புகைப்படத்துடன் இணைத்து போஸ்டர்..!

Published : Sep 15, 2021, 01:33 PM IST
மீண்டும் அண்ணா... விஜய் புகைப்படத்துடன் இணைத்து போஸ்டர்..!

சுருக்கம்

விஜய் புகைப்படத்தையும் அண்ணா புகைப்படத்தையும் இணைத்து மார்ஃபிங் செய்து அவரது ரசிகர்கள் சுவரொட்டி அச்சிட்டுள்ளனர்.   

விஜய் புகைப்படத்தையும் அண்ணா புகைப்படத்தையும் இணைத்து மார்ஃபிங் செய்து அவரது ரசிகர்கள் சுவரொட்டி அச்சிட்டுள்ளனர். 

பொதுவாகவே மதுரைக்காரர்கள் தங்களது தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களின் வால்போஸ்டர்களை வித்தியாசமாக வடிவமைத்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.  அந்த வகையில் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது விஜய் புகைப்படங்களை வைத்து வித்தியாசமாக கவனம் ஈர்க்கும் வகையில் வால்போஸ்டர்களை வடிவமைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின்113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாயிருந்தார்... எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா, தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா’’என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் பலர் ஆர்வத்தில் உள்ளனர். விஜய்யின் படங்களில் அரசியல் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்று வந்தாலும் அவர் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி