புறம்போக்கில் வீடுகட்டி பட்டா..?? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2021, 1:11 PM IST
Highlights

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலங்களாக வகை மாற்றம் செய்ய தடை உள்ள நிலையில், அந்நிலத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு பட்ட வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடக்  கோரி, சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலங்களாக வகை மாற்றம் செய்ய தடை உள்ள நிலையில், அந்நிலத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு பட்ட வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், மக்கள் தொகை அதிகரிப்பு, வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் துவங்க விலக்களிக்கப்படுவதாகவும், இந்த மனு சம்பந்தமாக விரிவான பதில்மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மக்கள் தொகை அதிகரித்து வருவதால், குடியிருப்புகளுக்கும், தொழில்சாலைகளுக்கும், நிலங்களின் தேவை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பான நடவடிக்கை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
 

click me!