பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன..? மாணவர்களுக்கு அண்ணாமலை ஆறுதல்..!

By Thiraviaraj RMFirst Published Sep 15, 2021, 3:30 PM IST
Highlights

தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன? 

தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன? என நீட் பயத்தில் இருப்பவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஊக்கமளித்துள்ளார்.

வறுமையை கண்டு பயந்து விடாதே... திறமை இருக்கு மறந்து விடாதே... என்று புரட்சித்தலைவர் பாடியது. மாணவர்களாகிய உங்களுக்குத்தான். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம். உங்கள் கனவுகளை விரிவாக்குங்கள். மருத்துவ படிப்பு என்ன? மருத்துவக் கல்லூரி கட்ட, பெரிய மருத்துவமனை கட்ட என்று இன்னும் எத்தனை எத்தனை வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன. தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன? 

தமிழக மாணவச் செல்வங்களே மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... அந்த மாலைகள் உனக்கு வெற்றி மாலைகள் ஆகட்டும். படிப்பின் மீது பிடிப்போடு இருங்கள். உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும்,பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் என்கிற மாணவன், உள்ளிட்ட மூன்று பேர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மாணாக்கர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. 

click me!