ஒற்றை தலைமை மோதல் முடிவுக்கு வந்ததா..? ஓபிஎஸ்க்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு என்ன..?

By Ajmal Khan  |  First Published Feb 23, 2023, 12:40 PM IST

 எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட ஓ.பன்னீர் செல்வம் இல்லையென உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டு நிலையில், அடுத்த கட்டமாக ஓபிஎஸ்க்கு உள்ள வாய்ப்பு என்ன ? என கேள்வி எழுந்துள்ளது.
 


ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஒரு முறை ஆதரவாகவும், மறுமுறை எதிர்ப்பாகவும் தீர்ப்பு வந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கிடைத்த இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது விசாரணை நிறைவடையும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அப்போது உறுதி தெரிவித்திருந்தது.

Latest Videos

துரோக சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுப்போம்..! இபிஎஸ்யை அலறவிடும் டிடிவி தினகரன்

இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்

இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும்,  கட்சியில் இருந்து  ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அடுத்த கட்டமாக ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் சட்ட விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

அதிமுக பொதுக்குழு செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

ஓபிஎஸ்க்கு இருக்கும் வாய்ப்பு என்ன.?

இருந்த போதும் இந்த வாய்ப்புகளில் பெரிய அளவில் பயன் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. எனவே  ஓபிஎஸ் தற்போதுள்ள நிலையில், சசிகலா, டிடிவி தினகரனோடு இணைந்து செயல்படுவது, தனிக்கட்சி தொடங்குவது, டெல்லியில் பாஜக தலைவர்கள் சந்திப்பது, அதிமுகவை மீட்க மீண்டும் தர்ம யுத்தம் என போராடுவது போன்ற வாய்ப்புகள் மட்டுமே ஓபிஎஸ்க்கு உள்ளதாக கூறப்படுகிறது.

வாய்ப்பு இல்லை

இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் கூறுகையில், ஓபிஎஸ் தரப்புக்கு இதற்கு மேல் வாய்ப்பு இல்லை, சசிகலா தான் தான் பொதுச்செயலாளர் என  வழக்கு தொடர்ந்து நான்கு வருடங்களாக காத்திருப்பது போல ஓபிஎஸ் காத்திருக்க வேண்டியது தான் இருக்கும் என  தெரிவித்தார்.  உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உச்ச தீர்ப்புக்கு மேல் வரும் காலத்தில் வேறொரு தீர்ப்பை கீழமை நீதிமன்றம் வழங்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

இபிஎஸ்க்கு இது தற்காலிக வெற்றி தான்.. என்னுடைய பழைய நண்பர் ஓபிஎஸ் என்ன பண்றார்னு பார்ப்போம்.. டிடிவி..!

click me!