இபிஎஸ்க்கு இது தற்காலிக வெற்றி தான்.. என்னுடைய பழைய நண்பர் ஓபிஎஸ் என்ன பண்றார்னு பார்ப்போம்.. டிடிவி..!

By vinoth kumar  |  First Published Feb 23, 2023, 12:21 PM IST

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டாலும் அது பலவீனமாகதான் இருக்கும். இனி அதிமுக இன்னும் பலவீனம் அடையும். வருங்காலத்தில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஆதரவோடுதான் இரட்டை இலை ஜெயிக்க முடியும். 


இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வென்றுவிடுவார்களா என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக பொதுக்குழுவிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும். அதிமுக பொதுக்குழு மற்றும் அதன் முடிவுகள் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு சரியானது என தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்..!

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு டிடிவி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்;-  இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டாலும் அது பலவீனமாகதான் இருக்கும். இனி அதிமுக இன்னும் பலவீனம் அடையும். வருங்காலத்தில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஆதரவோடுதான் இரட்டை இலை ஜெயிக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றி தான். இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வென்றுவிடுவார்களா என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுக பொதுக்குழு செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

அம்மாவின் கொள்கைகளையும், கட்சி தொண்டர்களையும் ஒருங்கிணைக்க தொடங்கியதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். இந்த தீர்ப்பு ஓபிஎஸ்க்கு தற்காலிக பின்னடைவு தான் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஓபிஎஸ் என் பழைய நண்பர் என்ன பண்றார்னு பார்ப்போம் என்றார். 

click me!