காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா – காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்த்து மத்திய அரசு

Asianet News Tamil  
Published : May 14, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா – காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்த்து மத்திய அரசு

சுருக்கம்

what is the draft scheme of cavery

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில் முடிவெடுத்தால் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறிய மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்டிருந்தது.

இந்நிலையில்  இன்று மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தை யூ.பி சிங்க் அவர்கள் உச்ச நீதி மன்றத்திடம் தாக்கல் செய்தார். இதில் 10 பேர் கொண்ட குழு உருவாக்கப்படும் என்றும், இந்த அமைப்பின் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகாலம் என்றும், காவிரி அமைப்பில் முழு நேர உறுப்பினர்களாக 2 பேர் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

காவிரி நடுவர்மன்றம் கூறிய பணிகளை இந்த அமைப்பு செயல்படுத்தும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், தெரிவித்துள்ளார்.  

உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை மத்திய அரசு செயல்படுத்தும் காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா என திட்டவட்டமாக எதுவும் இதில் கூறப்படவில்லை. கர்நாடாக, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி என நான்கு மாநிலத்துக்கும் வரைவுத்திட்ட நகல் அளிக்கப்பட்டுள்ளது.  

எனவே இது ஆணையமா, குழுவா, வாரியமா என்பதை அறிந்து கொள்ள வரும் 16ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். 16ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வரைவு குறித்து காவிரி தொடர்புள்ள அனைத்து மாநிலங்களும் கருத்து கூற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!