அமைச்சரவையை மாற்ற ஒப்புதல் அளிக்காத ஆளுநர் சென்னா ரெட்டி.! ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jun 30, 2023, 12:43 PM IST

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாக்கும்,  ஆளுநர் சென்னா ரெட்டிக்கு  இடையே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக 1994 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல் காரணமாக அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். அப்போது ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
 


ஜெயலலிதாவும் ஆளுநர் மோதலும்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முதன் முறையாக 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அமைச்சரவை மாற்றமானது தொடர்ந்து நடைபெற்று வரும். அந்த காலத்தில் அதாவது 1994ஆம் ஆண்டில்  அமைச்சர்களாக இருந்த ஜெயக்குமார், செங்கோட்டையன், மதுசூதனன், லாரன்ஸ், இந்திரா குமாரி ஆகியோரின் துறைகளை மாற்றி அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். இதற்கான கோப்பு ஆளுநர் சென்னா ரெட்டிக்கு தமிழக அரசு சார்பாக அனுப்பிவைக்கப்பட்டது, ஆனால் ஆளுநர் சென்னா ரெட்டி அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இருந்துள்ளார். சுமார் 8 நாட்களுக்கு பிறகும் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு கிடைக்கவில்லை.

Tap to resize

Latest Videos

அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

இதனையடுத்து முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நவம்பர் 16ஆம் தேதியன்று அமைச்சர்களின் துறைகளை முதலமைச்சர் ஜெயலலிதாவே மாற்றி அரசாணை வெளியிட்டார். மேலும் தமிழக அரசின் அரசாணையை ஆளுநர் மாளிகைக்கே ஜெயலலிதா அந்த கோப்புகளை அனுப்பிவைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து ஆளுநரின் ஒப்புதலின்றி முதலமைச்சரே அமைச்சர்களின் துறைகளை மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அப்போது ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், அரசியல் சாசனத்தின்படியே தான் கடமை ஆற்றியிருப்பதாக விளக்கம் அளித்திருந்தார். அரசு அலுவல் விதிகளில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சர்களின் இலாகா மாற்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்ததாகவும், இதனை அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் கருத முடியாது எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார்.

ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவராஜ் பாட்டில், அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி அமைத்த விவரங்களை ஆளுநருக்கு முதலமைச்சர் தெரிவித்துவிட்டதாகவும் 167-வது சட்டப்பிரிவில் குறிப்பிட்டுள்ள கடமையை செய்துவிட்டதாகவும் கூறினார்.முதலமைச்சர் வெளியிட்ட அறிவிக்கை, 164 மற்றும் 166 வது சட்டப் பிரிவுகளை மீறுவதாக கருத முடியாது என கூறிய நீதிபதி, மனுதாரரின் ரிட் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். எனவே அப்போதே அமைச்சரவையில் ஏற்பட்ட சட்ட சிக்கல் மீண்டும் தற்போது உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழக அரசுடன் உச்சகட்ட மோதலில் ஆர்.என்.ரவி..! ஆளுநர் வழுக்கிய பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?

click me!