நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது... அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்..!

Published : Jan 20, 2021, 04:42 PM IST
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது... அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்..!

சுருக்கம்

புதுச்சேரியில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதுதான் அர்த்தம் என ஜெகத்ரட்சகன் அந்தர் பல்டி அடித்துள்ளார். 

புதுச்சேரியில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதுதான் அர்த்தம் என ஜெகத்ரட்சகன் அந்தர் பல்டி அடித்துள்ளார். 

புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மரப்பாலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, கறுப்பு, சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன். 

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுத் தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என கூறியிருந்தார். இவரது பேச்சு காங்கிரஸ் கட்சியை கழற்றி விடும் நோக்கில் இருந்தது. 

இந்நிலையில்,  இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக ஜெகத்ரட்சகன் விளக்கமளித்துள்ளார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என புதுச்சேரியில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம். யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!
நாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!