BREAKING பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு... சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்..!

By vinoth kumarFirst Published Jan 20, 2021, 4:27 PM IST
Highlights

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு சிறைக்கு விரைந்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு சிறைக்கு விரைந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அபராத தொகையை டிடி மூலம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவதால், அவரை அன்று விடுதலை செய்வதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இன்று பிற்பகல் சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவக்குழு அவரது அறைக்கு விரைந்துள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். பல முறை சிறை மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சையும் பெற்று இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள நிலையில் சசிகலா திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!