ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானது எப்படி..? நீடிக்கும் பதட்டம்…? என்னதான் ஆச்சு நம்ம தூத்துக்குடிக்கு...?

Asianet News Tamil  
Published : May 22, 2018, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானது எப்படி..? நீடிக்கும் பதட்டம்…? என்னதான் ஆச்சு நம்ம தூத்துக்குடிக்கு...?

சுருக்கம்

what happerned in thoothugudi?

ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரி மக்கள் அமைதியான முறையில் 100 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட முடிவு எடுத்தனர், இதற்காக வணிகர்கள் இன்று முழுவதும் கடையடைப்பு நடத்தி பேரணியாக சென்று முற்றுகையிட திட்டமிட்டனர்.

இந்த பேரணிக்கு போலீஸ் தடை உத்தரவு போட்ட்து.144 தடை உத்தரவை மீறி காலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பல்வேறு வகையில் காவல்துறை தடுத்து பார்த்தது. போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்தி போட்டு சூறையாடினர்.

மேலும் கற்களை கொண்டுகாவல்துறையை தாக்கவும் செய்தனர். இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொழுத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்கார்ர்கள் தொடர்ந்து போராட முடிவு எடுத்துள்ளனர் எனத் தெரிந்த்தும் காவல்துறை கண்ணீர் குண்டு வீசியும், வஜ்ரா வாகனத்தை கொண்டு மக்களை விரட்ட முனைந்தனர்.

ஆயிரக்கணக்காண மக்கள் ஒன்றுகூடியதால் காவல்துறை ஓடி ஆட்சியர் அலுவலகத்தை பாதுகாக்க முனைந்த்து. மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதும் அங்குள்ள் வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து உடைத்தனர்.

இதனால் காவல்துறை துப்பாக்கி சூட்டில் இறங்கியது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். போலீஸ் தடியடி நட்த்தியதில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர். மேலும் ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கும் தீ வைத்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
திமுக கோட்டையில் ஓட்டை போடுவாரா விஜய்? தளபதியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அந்த ஒரு தொகுதி!