பச்சிளம் குழந்தைகளை படுக்க வைத்து பால் கொடுத்தால் என்ன நடக்கும்... தாய்மார்களே.!உஷார்..உஷார்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 17, 2020, 8:49 AM IST
Highlights

குழந்தைகளுக்கு தாய்பால் எப்படி கொடுக்க வேண்டும் என்று டாக்டர்களும், வீட்டில் உள்ள பெரியவர்களும் சொல்லுவதை தாய்மார்கள் கேட்க வெண்டும். குழந்தைகளுக்கு இப்படித்தான் பால் கொடுக்க வேண்டும் என்று சில வழிமுறைகள் இருக்கிறது.அதை விடுத்து படுக்கவைத்துக் கொண்டு பால் கொடுத்தால் குழந்தைகள் மூச்சு திணறி இறக்கவும் செய்வார்கள் என்பதற்கு உதாரணம் தான் அமித்ஷா,பிரியங்கா தம்பதியின் குழந்தை மரணம்.

T.Balamurukan

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூா் மாவட்டம், லால்பேட் கிராமத்தைச் சோ்ந்தவா் அமித்ஷா. இவர் கார் ஓட்டும் தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா. திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால், பல கோயில்களுக்கு சென்று சாமியிடம் பிராத்னை செய்து கொண்டனா்.கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவா்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பாக்கியம் கிடைத்ததால், அமித்ஷா குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேசுவரம் - பைசாபாத் செல்லும் விரைவு ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

 ரயிலில் வரும்போது, அதிகாலை தூங்கிக் கொண்டே பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திருக்கிறார் பிரியங்கா. அந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, குழந்தை அசைவற்று இருப்பதை கண்ட தாய் பிரியங்கா வாரிசுருட்டிக்கொண்டு அதிர்ச்சியில் எழுந்து குழந்தையை பார்த்திருக்கிறார். குழந்ததை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்திருக்கிறது. பின்னா், ரயில்  நிலையத்தில் உள்ள மருத்துவா்களிடம் குழந்தையைக் கொண்டு சென்றனர்.அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் மூச்சுத் திணறி, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். இதையறிந்த குடும்பத்தினரும், அமித்ஷா ,பிரியங்கா தம்பதியினர் கதறி அழுதனா்.

இதையடுத்து, கும்பகோணம் ரயில்வே போலீஸார் அக்குழந்தையின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பின்னா், கும்பகோணம் பெருமாண்டி சுடுகாட்டில் அக்குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் கொடூரமானதாக அமைந்துள்ளது. 

click me!