நான் போட்ட புள்ளி சுழலத் தொடங்கிவிட்டது... அது அரசியல் சுனாமியாக மாறும்... ரஜினியின் தாறுமாறு கணிப்பு!

By Asianet TamilFirst Published Mar 17, 2020, 7:55 AM IST
Highlights

 "அதுபோல அரசியலில் நான் இப்போ  ஒரு புள்ளி போட்டிருக்கேன். தற்போது அமைதியாக மக்கள் மனதில் ஒரு சுழலாக உருவாகியுள்ளது. அது வலுவான அலையாக மாற வேண்டும்.  அதுக்கு ரஜினிவரணும். ரஜினி ரசிகர்கள் வரணும். தேர்தல் நெருங்க நெருங்க அந்த அலை அரசியல் சுனாமியாக மாறும். இது ஆண்டவன் கையில் இருக்கிறது. அது மக்களிடமும் இருக்கிறது. அப்போது அரசியல் அற்புதம் அதிசயம் நிகழும்” என்று ரஜினி தெரிவித்தார். 
 

அரசியலில் நான் போட்ட புள்ளி, தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா டி.வி.யின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கக்கனின் இன்னோரு உருவம்தான் நல்லக்கண்ணு. அவரை நான் அப்படிதான் பார்க்கிறேன். குமரி அனந்தன், இல.கணேசனு விருது வழங்கியது சிறப்பு. எப்போதும் அலை வந்தால்தான் ஓர் எழுச்சி வரும். எம்.ஜி.ஆர். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார். திமுகவில் 25 ஆண்டுகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக முக்கியமானது. அவர் கணக்கு கேட்டதால் திமுகவிலிருந்து தூக்கி எறிந்தார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று மக்களிடம் கேட்டார். அவராகவே ராஜினாமா செய்திருந்தால், எதுவும் நடந்திருக்காது. தூக்கி எறிந்ததால், அனுதாப அலை ஏற்பட்டது. பிறகு முதல்வராகி வெற்றி பெற்றார்.


1991-ல் ஜெயலலிதா காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தார். அப்போது ராஜிவ் காந்தி படுகொலை நடந்தது. அதனால், திமுகவுக்கு எதிராக அலை வீசியது. தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஆந்திராவை யார் ஆள்வது என்று என்.டி.ஆர். கோஷம் எழுப்பினார். தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தது. அதுபோல அரசியலில் நான் இப்போ  ஒரு புள்ளி போட்டிருக்கேன். தற்போது அமைதியாக மக்கள் மனதில் ஒரு சுழலாக உருவாகியுள்ளது. அது வலுவான அலையாக மாற வேண்டும்.  அதுக்கு ரஜினிவரணும். ரஜினி ரசிகர்கள் வரணும். தேர்தல் நெருங்க நெருங்க அந்த அலை அரசியல் சுனாமியாக மாறும். இது ஆண்டவன் கையில் இருக்கிறது. அது மக்களிடமும் இருக்கிறது. அப்போது அரசியல் அற்புதம் அதிசயம் நிகழும்” என்று ரஜினி தெரிவித்தார்.

 
கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரஜினி, “தான் முதல்வராகப் போவதில்லை. ஆட்சி வேறு; கட்சி வேறு. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை; எழுச்சி ஏற்பட்டவுடன் அரசியலுக்கு வருவேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

click me!