ரெய்டின் போது நடந்தது என்ன? எடப்பாடியை நேரில் சந்தித்து எஸ்.பி.வேலுமணி சொன்ன விஷயம்..!

By Selva KathirFirst Published Aug 11, 2021, 11:33 AM IST
Highlights

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டுக்கு வருவார்கள் என்பது எஸ்பி வேலுமணி தெரிந்தே வைத்திருந்தார். இதன் காரணமாக சிக்கலான பைல்கள், சர்ச்சையான ஆவணங்களை ஆட்சியில் இருக்கும் போதே மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு வேலுமணி நகர்த்திவிட்டதாக சொல்கிறார்கள். 

ஒரே நேரத்தில் 60 இடங்களில் ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போது எஸ்பி வேலுமணியை எம்எல்ஏ ஹாஸ்டலில் சுமார் 12 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் லைக் செய்து வைத்திருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டுக்கு வருவார்கள் என்பது எஸ்பி வேலுமணி தெரிந்தே வைத்திருந்தார். இதன் காரணமாக சிக்கலான பைல்கள், சர்ச்சையான ஆவணங்களை ஆட்சியில் இருக்கும் போதே மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு வேலுமணி நகர்த்திவிட்டதாக சொல்கிறார்கள். இதன் பிறகே தேர்தல் சமயத்தில் வருவது வரட்டும் என மு.க.ஸ்டாலினை ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்கிற ரீதியில் வேலுமணி எதிர்த்ததாக சொல்கிறார்கள். இது தவிர ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தனது செல்வாக்கிற்கு எவ்வித பங்கமும் வந்துவிடக்கூடாது என்று அதிமுகவிலும் தனது அதிகாரத்தையும் அவர் பலப்படுத்தியே வைத்திருந்தார்.

இந்த நிலையில் வார இதழ் ஒன்றில் தன்னை டச் பண்ண முடியாது என எஸ்பி வேலுமணி கூறியதாக ஒரு கட்டுரை வெளியானது. அது தனக்கு போட்டுள்ள தூண்டில் என்றும் அந்த வார இதழ் ஆளுங்கட்சி நினைப்பதை சமீப காலமாக கட்டுரையாக எழுதி அவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுப்பதையும் வேலுமணி ஏற்கனவே யூகித்திருந்தார். இதனால் தான் செவ்வாய் கிழமை ரெய்டு நடைபெறும் போது அவர் சென்னையில் இருந்ததாக கூறுகிறார்கள். மேலும் தன்னை மட்டும் அல்லாமல் தன்னோடு நெருக்கமாக இருக்கும் அனைவரையும் போலீசார் நெருக்குவார்கள் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.

எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே சோதனை நடைபெற்றால் என்ன செய்ய வேண்டும், அதற்கு முன்பாக ஆவணங்களை எங்கு பத்திரப்படுத்த வேண்டும், கணினி, ஹார்டு டிஸ்க் போன்ற எலக்ட்ரானிக் ஆதாரங்களை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அறிவுறுத்தல்களை தன்னை சார்ந்த அனைவருக்கும் வேலுமணி ஏற்னவே கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டுக்கு சென்றுள்ளார். சுமார் 60 இடங்களில் ரெய்டு நடத்தியும் வெறும் 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மட்டுமே சிக்கியது. இது தவிர கிடைத்த சொத்து ஆவணங்களுக்கும் வேலுமணி தரப்பு சரியான ஆவணங்களை கொடுத்தாக கூறுகிறார்கள். அதோடு சில இடங்களில் ஆவணம் உள்ளிட்ட எதையும் கைப்பற்றவில்லை என்பதை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

இந்த நிலையில் எஸ்பி வேலுமணி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் விசாரணையை முடித்துவிட்டு எம்எல்ஏ ஹாஸ்டலிலயே விட்டுச் சென்றனர். ஆனால் அவரை விசாரணை முடிந்த உடன் நேராக எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தான் சென்றார். அங்கு சென்றதும், அண்ணா, ஒரு பிரச்சனையும் இல்லைனா, எல்லாம் ரொம்ப க்ளீன் என்று தான் எடப்பாடியிடம் எஸ்பி வேலுமணி கூறியதாக சொல்கிறார்கள். மேலும் விசாரணை என்ற பெயரில் தன்னை உட்கார மட்டுமே வைத்திருந்ததாகவும் பெரிய அளவில் சிக்கலான கேள்விகள் எதுவும் இல்லை என்றும் வேலுமணி கூற எடப்பாடி நிம்மதி பெருமூச்சு விட்டதாக சொல்கிறார்கள்.

click me!