கோயில்களுக்கு சென்றதால்தான் திமுக,வெற்றி... அப்போ பாஜக நாய்களும் கோயில்களுக்கு செல்பவர்கள்தானே.. நெல்லை கண்ணன்

Published : Aug 11, 2021, 11:30 AM IST
கோயில்களுக்கு சென்றதால்தான் திமுக,வெற்றி... அப்போ பாஜக நாய்களும் கோயில்களுக்கு செல்பவர்கள்தானே.. நெல்லை கண்ணன்

சுருக்கம்

கோயில்களுக்கு சென்றதால்தான் திமுக,வெற்றி... அப்போ பாஜக நாய்களும் கோயில்களுக்கு செல்பவர்கள்தானே.. நெல்லை கண்ணன்தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கோயில்களுக்கு சென்றதால்தான் தி.மு.க.,வெற்றிபெற்றது என பா.ஜ.,வினர் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் பி.ஜே.பி.,நாய்களும் கோயிலுக்கு செல்பவர்கள் தானே... அவர்கள் ஏன் வெற்றிபெறவில்லை. 

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ குறித்து அவதூறாக நாவடக்கம் இன்றி ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள நெல்லை கண்ணனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

 
    
திருநெல்வேலியில் கம்யூ.,கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன்,‛தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கோயில்களுக்கு சென்றதால்தான் தி.மு.க.,வெற்றிபெற்றது என பா.ஜ.,வினர் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் பி.ஜே.பி.,நாய்களும் கோயிலுக்கு செல்பவர்கள் தானே... அவர்கள் ஏன் வெற்றிபெறவில்லை. திருநெல்வேலியில் ஜெயித்துவிட்டார்கள்.

திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் ஏ.எல்.எஸ்.,மகன் லட்சுமணன் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. பணமும் செலவழிக்கவில்லை. அவனிடம் சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை. இதுபற்றி கட்சியின் ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் பேசினேன். கட்சியில் இருந்து 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். ஆனால் செலவழிக்கவில்லை. கூட்டணிக்கட்சிக்கும் பணம் தரவில்லை என சிலர் என் வீட்டுக்கு வந்து கூறினார்கள். திருநெல்வேலியில் தாமரை மலர்ந்துவிட்டதே.. நானும் திருநெல்வேலியில் மூன்று முறை தேர்தலில் நின்றுபார்த்துவிட்டேன். எனக்கு ஓட்டுபோடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். எவனாவது அறிவில்லாத முட்டாப்பயலுகளுக்கு ஓட்டுபோடுவார்கள்.

ஓ.பி.எஸ்.,மகன்கள் ஹவாலா பணம் கொண்டுசென்றபோதுதான் மொரிஷியஸ் தீவில் சிக்கிக்கொண்டனர். அதில் இருந்து தப்பிக்க ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திக்க டில்லி சென்றார். அவர் எதற்கு செல்கிறார் என தெரியாமல் இ.பி.எஸ்.,ம் டில்லி சென்றார். முதல்வருக்கு எதிராக தி.மு.க.,வில் ஒரு கோஷ்டியினர் கோபத்தில் உள்ளனர். ஒரு அமைச்சர் என்னிடம் பேசினார். தலைவர் ரொம்ப சீரியஸ்ஆக நடவடிக்கை எடுக்கிறார் என்றார்.இரண்டு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதில் இருந்து இப்படி தி.மு.க.,வினர் இப்படி ஆரம்பித்துவிட்டார்கள்’’என நெல்லை கண்ணன் பேசினார்.

இதில் திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க.,வேட்பாளர் லட்சுமணனை நாய் என்றும் ரூ 4 கோடிவாங்கிக்கொண்டு செலவழிக்காதவர் என தி.மு.க.,கட்சி குறித்தும் அவதுாறாக பேசியது குறித்து திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்அணி நிர்வாகி உமாமகேஸ்வரன், தொழில்நுட்ப அணி நிர்வாகி பலராமன் போலீஸ் கமிஷனர் செந்தாமரைக் கண்ணனிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதுாறாக பேசிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போதும் தி.மு.க.,குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு எதிராக திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!