அண்ணா பல்கலையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பாட திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். அமைச்சர பொன்முடி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 11:28 AM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு தரத்தில் உயர்த்தி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு தரத்தில் உயர்த்தி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், அண்ணா பல்கலைகழக புதிய துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள வேல்ராஜ், தமிழ்நாடு முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அங்கிருந்த உயர்கல்வித்துறை அமைச்சரையும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் பதவியேற்பிற்கு முன்பாக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறினார். 

அப்போது அவரிடம், அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதோடு, கல்வி ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். மேலும், Blended முறையை புகுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்த அவர், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும், தொழில்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என யோசனைகளை முன் வைத்து கலந்து பேசியுள்ளதாக தெரிவித்தார். அதேப்போல், ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். 

அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு பல்கலைக்கழகமாக உயர்ந்த தரத்தில் புதிய துணைவேந்தர் உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், புதிதாக பதிவியேற்க இருக்கும் துணை வேந்தர் வேல்ராஜ்க்கு எனது பாராட்டுக்கள் என்றும் அவர் கூறினார். அனைவரும் கலந்துபேசி ஒற்றுமையான சூழலைஅண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். கல்லூரிகளின் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
 

click me!