போகுமிடமெல்லாம் வாக்கிங்... அடங்காத மா.சு..! ஹீரோ போல செந்தில் பாலாஜி..!

By vinoth kumarFirst Published Aug 11, 2021, 11:12 AM IST
Highlights

மலை கிராமம் முதல் மாபெரும் நகரங்கள் என எங்கு சென்றாலும் நடைப்பயிற்சியை கைவிடாமல் கடைபிடித்து வருகிறார் மா.சுப்ரமணியன். அப்படி செல்லும்போது அந்தந்தப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களும் அவருடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

மலை கிராமம் முதல் மாபெரும் நகரங்கள் என எங்கு சென்றாலும் நடைப்பயிற்சியை கைவிடாமல் கடைபிடித்து வருகிறார் மா.சுப்ரமணியன். அப்படி செல்லும்போது அந்தந்தப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களும் அவருடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(61) எங்கு சென்றாலும் காலையில் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை உணர்த்தி வருகிறார். இவர் இளைஞர்களை போல் தினசரி மாரத்தானில் கலந்து கொள்வார். கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வார். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் எப்போதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பாடுவார்.

இவரது வீடியோக்களை பார்த்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கம் யாவருக்கும் வரும். பல கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்கிறார். ஒட்டப்பந்தய சாதனைகள் பல படைத்திருக்கிறார். குக்கிராமங்களுக்கு சென்றாலும், நகரங்களுக்கு சென்றாலும் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் நிச்சயம் மேற்கொள்வார். சமீபத்தில் யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வரும் ஓசூர் வனக்கோட்டம் அஞ்செட்டி வனப்பகுதிக்கு அருகே பெட்டமுகிலாம் மலைக் கிராமத்திற்கு நடந்தே 15 கிலோ மீட்டர் தூரம் சென்று மலைகிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதேபோல், நேற்று 2004ம் ஆண்டு காரில் மதுரைக்கு செல்லும் வழியில் பெரம்பலூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கால் மூட்டு மாற்று அறுவை செய்ய நேரிட்டதோ, அந்த விபத்து நடந்த அதே ஊரில் 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் முடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றிரவு கரூர் வந்தார். இவர், கரூரில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை கரூர் வெண்ணெய்மலையில் உள்ள ரோட்டரி மைதானத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மக்களோடு மக்களாக இணைந்து  நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

வழக்கமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அங்கு சூப் வழங்கப்படும். இன்று வழங்கப்பட்ட நெல்லிக்காய் சூப்பை அங்கு வழக்கமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுடன் சேர்ந்து அமைச்சர்களும் இருவரும் அருந்தினர்.

click me!