மீரா மிதுன் சாதிவெறி பேச்சு.. கைது உறுதி.?? விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்.

Published : Aug 11, 2021, 10:26 AM ISTUpdated : Aug 11, 2021, 10:37 AM IST
மீரா மிதுன் சாதிவெறி பேச்சு.. கைது உறுதி.?? விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்.

சுருக்கம்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மீராமிதுனை விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மீராமிதுனை விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருபவர் நடிகை மீதாமிதுன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ஆரம்பித்து என மூஞ்சியை எல்லா நடிகைகளும் காப்பியடிக்குறாங்க என பீதியைக் கிளப்பியது வரை மீராமிதுனின் பப்ளிசிட்டி அலப்பறைகள் அளவில்லாதது. 

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ஜோதிகா போன்றோரைப் பற்றியும் அவர் சமீபத்தில் மிக மோசமாக பேசியும், பதிவிட்டும் சர்த்தையை ஏற்படுத்தினார். அது அவரது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. விஜய் சூர்யா ரசிகர்களின் மீரா மிதுனை கிழித்து தொங்கவிட்டதைத் தொடர்ந்து தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார் அவர். ஆனாலும் அவரது அலப்பரைகள் இன்னும் கொஞ்சம்கூட குறையவில்லை. தொடர்ந்து அவர் சர்ச்சை கருத்துக்களை பரப்பி வருகிறார்.

இந்நிலையில் மீராமிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மீராமிதுனை விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இது உத்தரவு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மீராவை நிச்சயம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது குறிப்பிடதக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்