என்ன ஆச்சு விஜயகாந்துக்கு..?? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி..

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 8:36 AM IST
Highlights

அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகிய இருபெருத் தலைவர்கள் இருந்தபோதே, அரசியல் களத்தில் இறங்கி அதிரடி காட்டியவர் விஜயகாந்த். 

எம்ஜிஆருக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல.சிம்ம குரலுக்கு சொந்தக்காரரான விஜயகாந்த், தனது அடுக்குமொழி வசனத்தால் ரசிகர்களை கவர்ந்து அதை வாக்கு அரசியலாக மாற்றி எதிர்க்கட்சித் தலைவராக உயரம் அளவிற்கு சாதனை படைத்தவர் அவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சரியாக பேச முடியாத நிலைமைக்கு ஆளாகி உள்ளார். பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி சென்னையில் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. அதே நேரத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது. விஜயகாந்த திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!