விஜய் கூட்டத்தில் நடந்தது என்ன..? உயிரி**ப்புகளுக்கு இதுதான் காரணமா? - பெண் பரபரப்பு புகார்..!

Published : Sep 27, 2025, 09:35 PM IST
Karur

சுருக்கம்

கூட்டத்தில் பிடித்து அனைவரையும் தள்ளி விட்டார்கள். விஜய் மதியம் வருவதாக கூறி இருண்தார், ஆனால் இரவுதான் வந்தார். பலமணி நேரம் கூட்டம் அப்படியே இருந்தது. யாரும் கட்டுப்படுத்தவில்லை. பலர் தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்தனர்.

கரூரில் விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் 33 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கரூர் நகரமே சோகத்தில் மூழ்கியது. 6 குழந்தைகள், 17 பெண்கள், 10 ஆண்கள் என 31 பேரும் உயிரிழந்த நிலையில் தான் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழே, கூட்ட நெரிசல் காரணமாக மயக்கம், சுவாச சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. விஜயின் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தவெக் தலைவர் விஜய் முன்பே, திமுக அரசு திட்டமிட்டு குறுகிய இடத்தை ஒதுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உரிழப்புகளுக்கு என்ன காரணம் என கூட்டத்தில் இருணநத இளம்பெண் ஒருவர் கூறுகையில், ‘‘விஜய் வருகிறார் என்றால் அவரை பார்க்க வந்திருப்பவர்களை செல்லும் வரை பாதுகாப்பாக அனுப்பி இருக்க வேண்டும். கூட்டத்தில் மூச்சு விட முடியாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டனர். பல பேர்பேர் இறந்து இருக்கிறார்கள். இப்போ விஜய் அதை எல்லாம் வந்து பார்க்கிறாரா? அவர் பேசாமல் வந்து பேசிவிட்டு போய்விட்டார். கூட்டத்தில் பிடித்து அனைவரையும் தள்ளி விட்டார்கள். விஜய் மதியம் வருவதாக கூறி இருண்தார், ஆனால் இரவுதான் வந்தார். பலமணி நேரம் கூட்டம் அப்படியே இருந்தது. யாரும் கட்டுப்படுத்தவில்லை. பலர் தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்தனர்.

ஸ்டாலின் கூட, முப்பெரும் விழா நடத்தினார். அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தார்கள். தவெகவினர் எதையுமே கண்டுகொள்ளவில்லை. எல்லாரையும் பிடித்து தள்ளி விட்டார்கள். வந்திருந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்’’ என படபடப்போடு சொல்கிறார்.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போதிய தடுப்பு வேலிகள், தனி நுழைவு-வெளியேறும் வாயில்கள் இல்லாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மக்கள் அதிகம் திரண்டதால் இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத்திணறல் அதிகரித்தது. பெரிய அளவிலான கூட்டத்தில் தண்ணீர் விநியோகம் மற்றும் உடனடி மருத்துவ வசதி ஏற்பாடு போதாமையாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உரையாடல் முடிந்ததும் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டதால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த மரணங்களுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கூட்ட நெரிசல் தவிர்க்க, ஒழுங்கான பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கு காவல்துறையும், தவெக தொண்டர்களும் பொறுப்பேற்க வேண்டும்.தவெக கூட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன. அதிமுக ஆதரவாளர்களோ இது "திமுக ஆட்சியில் இது நடக்கிறது" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு