நாமக்கல்லில் இடம் கொடுக்காம ரெண்டு நாளா இழுக்கடிக்கிறாங்க..! ஆனா எங்களுக்கு 10 நிமிஷம் போதும் இடத்தை ரெடி பண்ண... அதிர வைக்கும் தவெக பெண்

Published : Sep 26, 2025, 09:12 AM IST
tvk vijay

சுருக்கம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் (TVK) விஜய், நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். பல இழுபறிகளுக்குப் பிறகு நாமக்கல் நிகழ்ச்சிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் பிரசாரப் பயணத்தை திருச்சியில் தொடங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் அவர் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொண்டார்.

இந்தத் தொடர்ச்சியில் நாளை (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஆரம்ப கட்டத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விஜய் பரப்புரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலம் மாற்றப்பட்டு கரூர் இணைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெறவுள்ள பிரசாரத்துக்கான காவல்துறை அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. முதலில் மதுரைவீரன் கோவில் அருகே நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாற்று இடமாக கே.எஸ். தியேட்டர் அருகே புதிய தளத்தை காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த அனுமதியுடன் சில கடுமையான நிபந்தனைகளையும் காவல்துறை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக நிபந்தனைகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாதபோதிலும், பிற மாவட்டங்களில் விதிக்கப்பட்டதுபோலவே பேனர்கள் ஒட்டுதல், பட்டாசு வெடித்தல், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது போன்றவை தடை செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதும் தவெக தொண்டர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தவெக பெண் நிர்வாகிகள் கூறியதாவது, "போன வாரம் 3 இடங்களை தேர்ந்தெடுத்து காவல்துறைக்கு கொடுத்தோம். ஆனால் அவர்கள் மிகவும் இழுத்தடித்து தற்போது கே.எஸ் தியேட்டர் அருகே அனுமதி அளித்திருக்கிறார்கள். 2 நாள் எங்களுக்கு அதிகம் தான். தளபதி வருவதற்கு 10 நிமிடம் இருந்தாலே போதும், நாங்கள் அதற்குள் இடத்தை தயார் செய்துவிடுவோம். இதுபோன்று எங்களை இழுத்தடிக்காதீர்கள்.

எங்கள் கூட பிறந்த அண்ணன் விஜய் வருகிறார். எங்கள் பிள்ளைகள் தாய் மாமனை பார்க்க எங்களை விட ஆவலோடு காத்திருக்கிறார்கள். அந்த இடம், இந்த இடம், ஆல் ஏரியாவில் கில்லி நாங்க" என்று விஜயின் பஞ்ச் வசனத்தை தெறிக்க விட்டார்கள் பெண் நிர்வாகிகள். தொடர்ந்து பேசிய அவர்கள், எங்கள் அண்ணன் வராரு பேச்சை கேட்டுட்டு நீங்க இருந்துதான் ஆகணும். அண்ணன் வராரு வழிவிடு" என்று ஆனந்தத்தில் கொக்கரிக்கிறார்கள் நாமக்கல் மாவட்ட தவெக பெண் நிர்வாகிகள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!
தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!