#UnmaskingChina: லடாக் எல்லையில் நடந்தது என்ன? பழனி தம்பி இதயக்கனி சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்.!!

Published : Jun 18, 2020, 08:59 AM ISTUpdated : Jun 24, 2020, 03:43 PM IST
#UnmaskingChina: லடாக் எல்லையில் நடந்தது என்ன? பழனி தம்பி இதயக்கனி சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்.!!

சுருக்கம்

இவர் ராஜஸ்தான் பகுதியில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வார்களாம். லடாக் பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக தன்னுடைய அண்ணனிடம் எதுவும் பேச முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய வீரர்களை தாக்கிய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த தாக்குதலில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். இவரது தம்பி இதயக்கனி இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ராஜஸ்தான் பகுதியில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வார்களாம். லடாக் பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக தன்னுடைய அண்ணனிடம் எதுவும் பேச முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இந்திய எல்லை காத்த மாவீரன் பழனியின் உடல் மதுரை விமானநிலையத்திற்கு நேற்று இரவு 11.45 மணிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் பிற்கு அங்கிருந்து இராணுவ வண்டியில் சொந்த ஊரான கடுக்கலூருக்கு பழனியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பழனியின் முகத்தை பார்த்து கிராம மக்கள் அனைவரும் கதறி அழுத்த காட்சி காண்போரின் இதயத்தை சுக்குநூறாக்கியது. கிராமமே அமைதி காத்து நின்றது சம்பவம் மெய்சிலிர்க்க வைத்தது.


தன்னுடைய அண்ணன் இறந்ததையடுத்து ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார் பழனியின் தம்பி இதயக்கனி.
லடாக் பகுதியில் என்ன நடந்தது என்று விளக்கமளித்த போது..." நான் 2011ம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். அண்ணன் (பழனில் இறந்த தகவல் கிடைத்ததும் அங்கிருந்தவர்களிடம் தொலைபேசியில் விசாரித்தேன். "லடாக் பகுதியில் நம் இந்திய ராணுவ வீரர்கள் 150 பேர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஜீன் 15ம் தேதி இரவு 9.30மணிக்கு சீன ராணுவ வீரர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென கற்கள் கம்பி கொண்டு தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் வீரர்களும் திருப்பி தாக்கியிருக்கிறார்கள். அதில் 6பேர் அருகில் இருந்த ஆற்றில் குதித்ததாக அங்கிருந்தவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.என்கிறார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!