#UnmaskingChina: எல்லையில் என்ன நடக்குது? மறைக்காம வாயை திறந்து பேசுங்க... பிரதமருக்கு சோனியா, ராகுல் அட்வைஸ்!

By Asianet TamilFirst Published Jun 18, 2020, 8:28 AM IST
Highlights

சீனா இந்த அத்துமீறலில் எப்படி ஈடுபட்டது என்பதை நாட்டு மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கு உள்ளது. இந்திய பகுதியில் சீனா எவ்வளவு துாரம் ஆக்கிரமித்துள்ளது, அதை எப்படி ஆக்கிரமித்தது என்பதையும் பிரதமர் மோடி மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த நிலைமையை எதிர்கொள்ள அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டும். 

எல்லையில் என்ன நடக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் எல்லையில் சீனா இந்தியாவுடன் வாலாட்டி வருகிறது. லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தார்கள். சீன தரப்பில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் குறித்து அந்த நாடு வாய் திறக்க மறுத்துவருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. எல்லையில் நடப்பதை மத்திய அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சீன ராணுவம் கடந்த இரு மாதங்களாகவே, லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்திய வீரர்கள் மீது சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதல்  மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் ராணுவத்தினர் 20 பேர் செய்துள்ள உயிர்த் தியாகம் 130 கோடி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சூழலில் சீனா இந்த அத்துமீறலில் எப்படி ஈடுபட்டது என்பதை நாட்டு மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கு உள்ளது. இந்திய பகுதியில் சீனா எவ்வளவு துாரம் ஆக்கிரமித்துள்ளது, அதை எப்படி ஆக்கிரமித்தது என்பதையும் பிரதமர் மோடி மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த நிலைமையை எதிர்கொள்ள அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டும். இந்த நெருக்கடியான தருணத்தில் இந்திய வீரர்கள், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆதரவாக, காங்கிரஸ் இருக்கும். இந்த சவாலான நேரத்தில் எதிரிகளை எதிர்கொள்ள ஒட்டுமொத்த ஒற்றுமையாக இருக்கும்” என்று சோனியா தெரிவித்துள்ளார். 
இதேபோல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள வீடியோவில், “எல்லையில் இரு படைகளுக்கு இடையே நடந்த மோதல் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும். நீங்கள் ஏன் மறைக்கிறீர்கள். தைரியமாக உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு பின்னால் நாடே இருக்கிறது. பயப்படத் தேவையில்லை.” என்று தெரிவித்துள்ளார். 

click me!