எங்கள் பேச்சை கேட்டிருந்தால் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும்... எடப்பாடி மீது ஆதங்கப்படும் உதயநிதி ஸ்டாலின்.!

Published : Jun 17, 2020, 05:58 PM IST
எங்கள் பேச்சை கேட்டிருந்தால் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும்... எடப்பாடி மீது ஆதங்கப்படும் உதயநிதி ஸ்டாலின்.!

சுருக்கம்

அதிகரிக்கும் நோயாளிகள், இறப்பு எண்ணிக்கை சென்னையில் கொரோனா சமூக பரவலாகிவிட்டது என்பதையே காட்டுகின்றன. மக்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு செவிகொடுத்து, சரியானவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்தால் கொரோனா இந்நேரம் கட்டுக்குள் வந்திருக்கும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆதங்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பேரிடரில் மக்களை காக்க இணைந்து இயங்க வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு செவிகொடுத்து, சரியானவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்தால் கொரோனா இந்நேரம் கட்டுக்குள் வந்திருக்கும். மாற்றுக் கருத்துள்ளோரை மதிக்கும் மாண்பை எப்போது கற்கப்போகிறீர்கள்?

அதிகரிக்கும் நோயாளிகள், இறப்பு எண்ணிக்கை சென்னையில் கொரோனா சமூக பரவலாகிவிட்டது என்பதையே காட்டுகின்றன. மக்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர். வட்ட வாரியாக நடமாடும் பரிசோதனை நிலையம், வீடுவீடாக பரிசோதனை... இப்படி மக்களை காப்பாற்ற ஏதேனும் செயல்திட்டங்கள் உங்களிடம் உள்ளனவா?’’என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!