நீ என்ன சொல்றது... நானே பார்த்துகிறேன்... எடப்பாடியாருக்கு எதிராக களமிறங்கும் டி.டி.வி.தினகரன்..!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2021, 2:29 PM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் ஒரு கை பார்ப்போம் என்கிற சூழலுக்கு டி.டி.வி தினகரன் வந்துள்ளார் என கணிக்கப்பட்டுள்ளது.  

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை தி.நகர் இல்லத்தில், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார் 

பின்னர், அவர் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அமமுக தலைமையில் புதிய கூட்டணி என கூறினார். மேலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதே தங்களின் முக்கியப் பணி. அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும். அதிமுக- அமமுக இணைப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என டி.டி.வி.தினகரன் பதிலளித்தார்

இந்நிலையில், நாளை முதல் அமமுக விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில், 3-03-2021 முதல் 10-03-2021 வரையில் காலை 10 மணி முதல் மாலை 6 வரை விருப்ப மனு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கான கட்டண தொகையாக, தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரிக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் ஒரு கை பார்ப்போம் என்கிற சூழலுக்கு டி.டி.வி தினகரன் வந்துள்ளார் என கணிக்கப்பட்டுள்ளது.  

click me!