அமமுக தலைமை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி... மாஸ் காட்டும் டிடிவி.தினகரன்..!

Published : Mar 02, 2021, 02:28 PM IST
அமமுக தலைமை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி... மாஸ் காட்டும் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் ஒரே குறி, அதற்காக எந்த அம்பையும் விட தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் ஒரே குறி, அதற்காக எந்த அம்பையும் விட தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலளார் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக  பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால், அமமுக தலைமையை அதிமுக, பாஜக ஏற்காது. ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி பற்றி அமமுக பேசத் தயார். 

திமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணி பேசத் தயார். மத்திய பட்ஜெட் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துதான் வருகிறேன். கூட்டணி தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி முடிவானதும் அறிவிப்போம். எங்களின் ஒரே இலக்கு திமுக ஆட்சியை வரவிடாமல் தடுப்பதுதான் எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு